இருளில் இருக்கும் கொற்றவைதான் முழுமை கொண்டவள். புலரியில் நடை திறக்கும் பூசகர் மட்டுமே பார்க்கும் தெய்வம். முதல்சுடர் ஏற்றப்படுகையில் அவள் இம்மண்ணுக்குரியவளாகிவிடுகிறாள். அவள் கொண்ட கொடுந்தோற்றம் அனைத்தும் கருணையின் மாற்றுருக்களாக மாறிவிடுகின்றன.
ஒளிமிக்கவன் கர்ணன். ஆனால் அவன் மனசுக்குள் ஆழத்தில் கொற்றவை இருட்டாகக் குடிகொள்கிறாள். இந்தவரிபோல அவன் ஆழ்மனதைச் சொல்லும் அற்புதமான படிமம் வேறு இல்லை
கிருஷ்ணன் சிவராமன்