ஒரே கார்க்கோடகன் என்ற உருவம் குந்தி மனதிலும் துரியோதனன் மனதிலும் தோன்றவில்லையா ? கர்ணன் பிருஹத்காயரை பற்றி அதிகம் கேள்விப்பட்டது போல் இல்லை, அதனால் அவனுக்கு அந்த உருவம் சூதன் சொல்லிய தீர்க்கதமஸாகவே தெரிந்திருக்கலாம். ஜெயத்ரதனுக்கு தந்தையாக தெரிந்திருக்கலாம்.
எனக்கு இந்த உருவம் தந்தை என்ற பாத்திரத்தின் இன்னொரு முகத்தை காட்டுகிறது. தன் சந்ததியினரின் உயிரை, வாழ்வை பற்றிய அச்சம். திருதராஷ்டிரன்-துரியோதனன், துரோணர்-அஸ்வத்தாமா, பிருஹத்கா யர்-ஜெயத்ரதன் என்று அச்சத்தால் கோர்க்கப்படும் ஒரு தரப்பு.
மது