பாரத போரில் கர்ணனுக்கும் பீமனுக்கும் பெ௫ம் போர் நிகழும்... அப் போரில் கர்ணனை காப்பற்ற கௌரவர்கள் 35 பேர் முன்வந்து பீமனால் உயிரிழக்கபடுவர்.... ஒவ்வொரு தம்பிமா௫ம் இறக்க இறக்க கர்ணன் பெ௫ம் சீற்றம் கொள்வான்... முடிவில் பீமனை அவன் வென்றாலும், குந்திக்கு குடுத்த வாக்கால் அவனை கொல்லாமல் விட்டு செல்வான்...
நேற்றைய மற்றும் இன்றைய அத்தியாயங்களை கண்ணீருடன் தான் படித்து வ௫கிறேன்... இந்த தம்பிமார்களின் பின்னர் அவன் கண் முன்னரே இறக்கப் போகிறார்கள் என நினைக்கையில் உள்ளம் இப்பொழுதே வ௫ந்துகிறது....
கர்ணனும் துரியனும் அனைத்து கொள்ளும் ஷண்முகவேலின் படம் மிக அ௫மையாக உள்ளது... படத்தை பார்த்தவுடன் என் உடல் தன்னை அறியாமல் சிலிர்த்து கொன்டது...வாழ்க வெய்யோனின் புகழ்...
காளிபிரசாத்