இன்றைய வெய்யோன் அற்புதம். 100 மாமன்கள் இருக்க துரியோதனன் கர்ணனை மாமனாக அங்கீகரித்து முறையாக அழைத்தது படிப்பவர்களுக்கு நிம்மதியாக இருக்கிறது. என்னதான் இருந்தாலும் மாமன் சீருக்கு தனி மரியாதைதானே?
செண்ற சில நாட்களகவே இரண்டு மனைவிகளும், கலிஙத்து சேடியும் தொடர்ந்து அவமானப்படுதிக் கொண்டே இருந்தனர். எல்லவற்றையும் நிகர் செய்வது போல இன்று இந்த மரியாதை கிடைத்திருக்கிறது.ஜெயத்ரதன் மணத்தன்னேற்பில் இழிவு படுத்தப்பட்டதற்கு துச்சளை என்ன நினைத்துக் கொள்வாளோ என்றும் அச்சமாக இருக்கிறது.
லோகமாதேவி