அன்புள்ள ஜெமோ,
நலம் தானே?
பத்மஶ்ரீ விருது பற்றி நீங்கள் எழுதியதைப்படித்தேன்.
நானாக இருந்திருந்தால் வாங்கிக்கொண்டிருப்பேன்..
நல்ல வேளையாக நீங்கள் நானாக இல்லை.
பத்தோடு பதினொன்றான பத்துமஶ்ரீ நமக்கு வேண்டாம் தான்.
நிற்க.. வெய்யோன் குறித்து ஒரு விஷயம்.
நேற்று நீங்கள் விவரித்த கண்ணிழந்த அந்தணர் (கர்ணனின்
பிறழ்காட்சி) முதலில் கலி என்று எண்ணினேன். பின்னர்
எனக்கு அது தீர்க்கதமஸ் என்று தோன்றியது. அன்பில்லாமலே
பெரும் மைந்தர்திரள் உருவாக்கிய அவர் அன்பும் பாசமுமாய்த்ததும்பும்
திருதராஷ்டிரனின் அவையில் ஒரு மூலையில் புழுங்கத்தான் வேண்டும்.
கர்ணனின் பாத்திரம் வளரும் விதம் மிகவும் நம்பிக்கையளிக்கிறது.
அன்புடன்,
ஜெய்கணேஷ்.