சிறுமை தீண்டா பேரறத்தானின் மகன் சுஜாதன். பகஷ பாவம் கிடையாது. அறமும் அதன் வழி வந்த பேரன்புமாய் மட்டும் நிற்கிறான்.
வஞ்சினம் உரைத்த ஒவ்வொரு சொல்லும் மீண்டும் மீண்டும் வாசிக்க வாசிக்க எத்துனை தூரம் இதற்காக காத்திருந்திருக்கிறேன் என்று அறிகிறேன்.
வெய்யோனின் மகனை நோக்கி விசப்பட்ட அம்புகள் அவனை ஒரு போதும் தைப்பதில்லை. அவை தைக்காததாலேயே சுஜாதன்களின் மனங்கள் ரணம் கொண்டு விடுகின்றன, அவர்கள் வெய்யோனின் உயர்வு அறிந்தவர்களாக இருப்பதே அவர்களின் ஊழ் போலும். நானும் அதில் ஒருவனாக அமரந்திருக்கிறேன்.
வெரும் பெயரும், எண்ணிக்கையுமாக இருப்பவர்களையும் உயிரும் உடலுமாக் எதிர் கொண்டு வந்த நிருத்ததுகிறீர்கள ஜெ. நான் நன்கு அறிந்தவர்களாக இருக்கிறார்கள் இவர்கள் பலநேரம்.
அவர்கள் மகத்தானவர்கள் அல்ல, எனில் அவர்கள் எந்த மகத்தானவர்களுக்கும் குறைந்தவர்களும் அல்ல.
சுந்தரவடிவேல்