ஜெ
வெண்முரசில் வரும்
வரிகள் பலசமயம் போகிறபோக்கில் எழுதப்பட்டவையாகத்தெரிகின்றன. சந்தம் அமைந்திருப்பதனாலேயே
அவற்றை வேகமாக வாசித்துக்கொண்டு போகிறோம் ஆனால் அவற்றை நிறுத்திவாசித்தால் அவை வரிவரியாக
சிந்திப்பதற்குள்ளவை என்று தெரிகிறது
‘சொல்!
நீ விழைவதென்ன? மூவுலகும் வெல்லும் திறனா? முனிவர்க்கு நிகரான
மூப்பா? மூவாமுதலா பெருவாழ்வா? முதல்முழுமையா?’ என்று சிவன் கேட்டார்.
என்று வருகிறது
வெய்யோன் 40ல்
.
உலகியல் வெற்றி
தவவெற்றி
முக்தி
பிரம்மநிலை
என்று ஒருவன் அடையக்கூடிய
நான்கு நிலைகளை அந்த ஒரு வரி குறிக்கிற. சந்தத்துடன் அமைந்துள்ளது
இத்தனைபெரிய நாவலில்
இவ்வகை நுட்பங்களை எவ்வளவுதான் வாசிக்கமுடியும்?
சாமிநாதன்
அந்த ஒரு வரி குறிக்கிற. சந்தத்துடன் அமைந்துள்ளது
இத்தனைபெரிய நாவலில்
இவ்வகை நுட்பங்களை எவ்வளவுதான் வாசிக்கமுடியும்?
சாமிநாதன்