Thursday, January 28, 2016

கர்ணனின் ஆளுமை



கர்ணன் ஒரு தாழ் குடியில் பிறந்தவன் என்பது எல்லோருக்கும் வெளிப்படை. 
அல்ல அவன் உயர்குடி சூரியன் மகன் என்கிற நம்பிக்கையும் இருக்கிறது. 
நமக்கு அவன் உளவிரிவு அவனுடைய குடும்பம். மனைவியின் அவமதிப்பு, அன்னையும் தந்தையும்

​ கூட​
 அவனை இக்கட்டில் மாட்டுவது அவன் அடிப்படை குண உயர்வு எல்லாம் புரிகிறது
அவனை அணுகி பார்பபவரகள்
​ அவன் கவச குண்டலங்களால் கவரப்படுகிறார்கள். 
அவன் உய்ர்ந்தவன் இறைக்கு ​சமம் என்று நினைக்கிறார்கள்.  
இந்த உணர்தல் தவிர அவனை அரசர்கள் விரும்பும் காரியங்கள் என்ன செய்தான்.?

மீனாம்பிகை

அன்புள்ள மீனாம்பிகை

நல்ல கேள்வி. மகாபாரதத்தைப் பொறுத்தவரை அவன் மாவீரன் என்பதற்கு அப்பால் பெரிதாக வெற்றி எதையும் அடையவில்லை. எதையும் செய்யவுமில்லை. ஊழின் மைந்தன் என்பதே அவன் மீதான பிரியத்திற்கான காரணமாக இருக்கலாம். பிரியம் கொண்டவர்கள் அனைவரும் வேறெவ்வகையிலோ ஊழால் பழிவாங்கப்பட்டவர்க

ஜெ