ஜெ,
ஜெயத்ரதனின் தந்தையின்
சித்தரிப்பு மிகநுட்பமானது. தீர்க்கதமஸ் காமாந்தகன் என்றால் இவர் பாசாந்தகன். காமம்
இல்லை, ஆனால் அவருக்கு பாசம் கண்ணை மறைக்கிறது. தவம்செய்து தெய்வத்தை நேரில் பார்த்தால்கூட
மகனுடைய வெற்றியைத்தான் கேட்கிறார். அந்த மனக்குறுகல்தான் குருட்டுத்தனம்
அவரும் ஒரு தந்தைதான்.
இங்கே மூன்று தந்தைகள் ஒன்றாகி கர்ணன் முன்னால் நிற்கிறார்கள். அந்த இணைப்பும் நுட்பமாக
விரிந்துகொண்டே வருவதைக்கண்டு மகிழ்ந்தேன். ஒன்றை ஒரு விளக்கக்கூடிய மூன்று எல்லைகளாக
இவர்கள் இருக்கிறார்கள்.
தன்னுடைய விரல்களில்
கண்களை வைத்திருக்கும் திருதராஷ்டிரரின் ஆளுமை ஒரு அற்புதம். அவரது கைகளின் தவிப்பையே
காணமுடிகிறது
எஸ் சிவராஜ்