Tuesday, January 19, 2016

எரிதழல்

அன்புள்ள ஜெ

வெய்யோன் மிகவிரைவாக வாசித்துச்செல்லும் நாவல். ஆனால் பல இடங்களில் அது ஆழமான மௌனத்தை தொட்டுவிடுகிறது

கர்ணன் கொற்றவை பற்றி நினைக்கும் இடம். சட்டென்று அந்த இடத்தில் மொழி நடனமிடத் தொடங்குவது அந்த அரைத்தூக்கநிலையின் விளைவு. அது ஆழ்மனத்தின் நடனம்

கன்னங்கரிய திருமுகம்.
செந்நுதல்விழி.
மான்மழு
பரிஎரி
முப்பிரி  படையணி 
உடுதுடி
நீறணி ஓங்குரு அன்னை.
பழுதற்ற பாய்கலை.
பைநாகக் கச்சை. பறக்கும் அனலாடை.
பூண்அணி பொற்கழல்.
மணியொளிர் மைநாக முடிசடை

என்னும் வரியை எத்தனை முறை வாசித்தேன் என்றே தெரியவில்லை. திரயம்பகை. நெற்றிக்கண் கொண்டவள் கொற்றவை. பரிஎரி என்று குதிரைமுக வடவைத்தீக்கு அற்புதமான புதியவார்த்தை. திரிசூலம் முப்பிரி படை. உடுக்குத்துடி. பாய்கலை என்னும் மறிமான் மேல் ஏறியவள். நாகபடம் எடுத்த கச்சை. மைநாகம் என்றால் என்ன என்று பார்த்தேன். விண்ணில் உள்ள ஒரு ஒளிவிடும் மலை என்று தெரிந்தது

சாமிநாதன்