அன்புள்ள ஜெ
இன்றைக்குப் பொங்கல். காலையிலேயே சூரியனின் மகனைத்தான் நினைத்துக்கொண்டேன். அவனுடைய தியாகமும் கொடையும் பொறுமையும் எதையும் பெரிதென நினைக்காத கம்பீரமும். கர்ணனை எவரால் விரும்பாமலிருக்கமுடியாது? அவனையே நினைத்துக்கொண்டிருக்கிறேன் என்றால் தப்பில்லை. கர்ணனைப்போன்றவர்கள் நம் அளவுகளுக்குக் கொஞ்சம் மிகையானவர்கள்.
அற்புதமாக அவனைக் காட்டிச்செல்கிறீர்கள். அவன் அங்கநாட்டிலே குறுகி இருக்கிறான். அஸ்தினபுரியை நெருங்கநெருங்க நிமிர்ந்துகொண்டே செல்கிறான். உடல்குறுகி அவன் அஸ்தினபுரிக்குள் நுழைந்த நாள் நினைவுக்கு வருகிறது. அவன் வந்த நாளில் பிரம்மமுகூர்த்ததில் சூரியன் எழுந்தது என்பது ஒரு லெஜெண்ட் ஆக மாறியிருக்கும் இல்லையா?
சபரி