ஜெ
தனித்தனி அத்தியாயங்களாக
இருந்தாலும் வெண்முரசின் அத்தியாயங்களின் நடுவே ஒரு தொடர்ச்சியை நான் பார்க்கிறேன்.
அது படிமங்களின் தொடர்ச்சியாக இருக்கிறது. கதையாக வாசித்தால் அந்தத்தொடர்ச்சி கண்ணுக்குத்தெரிவதில்லை.
வருணன் மூன்றாக
இருக்கிறான். அடுத்து மும்முகன் கதை. அடுத்து மூன்றுவகையான சமூகப்பின்னணியிலிருந்து
வரும் கதை. அடுத்து மூன்றாகவே இருக்கும் தரிசனங்கள்.
அதேபோல வருணன்
வேதக்கடவுளாக இருக்கிறான். அடியில் ஆதிக்கடவுளாகத்தெரிகிறான். ஆதிக்கடவுள் எப்படி வேதக்கடவுளாக
ஆனான் என்பது இப்போதுதான் சொல்லபப்டுகிறது. வெதங்களுக்கு அவன் உதவிசெய்தமையால்தான்
அந்தப்பரிசு அவனுக்கு அளிக்கப்பட்டது\
இந்தப்பகுதியே
வேதங்களில் உள்ள தொன்மையான தெய்வங்கள் எப்படி உருவாகி வந்தன என்பதைக்காட்டுவதாக எனக்குத்
தோன்றுகிறது. வேததெய்வங்களை எப்படி ஞானமாக்கமாக விளங்கிக்கொண்டார்கள் என்பதை முந்தைய
நாவலில் பார்த்ததனால் இது இன்னும் ஆழ்மாகச்செல்ல உதவியது
செந்தில்ராஜ்