ஜெ
பன்னிரு படைக்களம்
முதல் கிராதம் வரை ஒரு முக்கியமான மாற்றம் நிகழ்ந்திருக்கிறது. அதற்கு முன் கதையோட்டமே
வாசிப்பை கொண்டுசெல்வதாக இருந்தது. நீலம் மட்டுமே விதிவிலக்கு. இந்திரநீலத்தில் சில
பகுதிகள். மற்றபடி ஒரு ஓட்டம் இருந்தது. இப்போது ஒருவகையில் கவிதைபோல வரிவரியாக வாசிக்கும்படி
இருக்கிறது. ஆனால் ஒரு வேகமும் இருக்கிறது. வாசித்தபின் மீண்டும் மீண்டும் வாசிக்கவேண்டும்.
அப்போதுதான் ஓரளவேனும் ஒரு புரிதல் ஏற்படும்.
இந்த அத்தியாயங்களை
ஸ்க்ரோல் பண்ணி வாசிப்பவர்களும் ஒருமுறை மட்டும் வாசிப்பவர்களும் எவரிடமும் விவாதிக்காதவர்களும்
எதையுமே புரிந்துகொள்ள மாட்டார்கள் என நினைக்கிறேன். இதை ஒரு சிறப்பாகவே சொல்கிறேன்.
இதுவரை இந்நாவலை வாசித்தாயென்றால் இதை உன்னால் வாசிக்கமுடியும் என நீங்கள் சொல்வதுபோல
உள்ளது இது
செல்வராஜ்