Friday, December 9, 2016

மைநாகம்

ஜெ


மைநாகம் என இணையத்தில் தேடியபோது இந்தச் சினிமாப்பாட்டு கிடைத்தது. ஷியாம் இசை. இரண்டுநாட்களாக மூளையை பித்துப்பிடிக்கவைத்துக்கொண்டிருக்கிறது இந்தப்பாட்டு. இதற்கு என்ன பொருள் எனத்தெரியவில்லை. ஆனால் மைநாகம் பற்றியபாட்டு என தெரிகிறது

இப்படிப்பட்ட புராண உருவகங்கள் எல்லாம் சினிமாப்பாட்டில் வருவது பெரிய ஆச்சரியம்

சிவா


அன்புள்ள சிவா

அதற்குக்காரணம் கதகளி. அதில் மைநாகம் முக்கியமான உருவகம். அது கடலில் இருந்து எழுந்து வந்து மூழ்கப்போகும் மாலுமிகளுக்கு உதவும் கருணைகொண்ட மலை.

மைநாகம்
கடலில் இருந்து உயர்கின்றதா?
சிறகுள்ள மேகங்களாக
பனிக்காலத்தைத் தேடுகிறதா?

ஜெ