ஜெ
இந்திரனுக்கு புரந்தரன்
என்று ஒரு பெயர் உண்டு. அணைகளை அழிப்பவன், நகரங்களை அழிப்பவன் என்று பொருள். ஆய்வாளர்கள்
அவன் அணைகளை அழித்தான் என்ற வரிக்கு என்ன அர்த்தம் என்று பலவாறாக ஆராய்ச்சி செய்திருக்கிறார்கள்.
அணைகளைக்கட்டி வேளாண்மை செய்தவர்கள் பூர்வகுடிகள். அவர்களை எதிர்த்தவர்கள் ஆரியர்களாகிய
மேய்ச்சல் மக்கள். ஆகவேதான் அவர்களின் தெய்வமாகிய இந்திரன் அணைகளை அழித்தான் என சிலர்
சொல்லியிருக்கிறார்கள்
மிகவும் மெட்டஃபோரிக்கலாக
ஒரு கதைவந்து முடிந்ததுமே இந்த அரசியலையும் தொட்டுக்கொண்டு இன்னொரு கதை வந்து முடிவதைக்
கவனித்தேன். புற்றிகபுரியின் அணைகளை இந்திரன் அழிப்பதை அப்படித்தான் புரிந்துகொள்கிறேன்
சண்முகம்