Friday, December 2, 2016

இந்திரனின் தோல்வி



வெற்றி வெற்றியென புகழ் ஒளியின் உச்சத்தில் உட்கார்ந்திருக்கும் இந்திரன்  போன்றவர்கள் தோல்வியடையும்போது இழிவென்னும் ஆழத்தில் சுருண்டுவிழுந்து எதற்காவது அடிமையாகிவிடுகின்றார்கள். குறிப்பாக மதுவிற்கு அடிமையாகிவிடுகிறார்கள். வெற்றிப்புகழும் ஒரு போதைதான் அதை அருந்தியவர்கள் அது கிட்டாதபோது பொய்போதையில் விழுகின்றார்கள். 

இந்திரனின் தோல்வியின் ஆழத்தையும் காட்டும் இடத்தில் கிராதம் மானிட மனங்கள் சறுக்கும்போது அடையும் இழிநிலையை தன்னை உணரா எல்லையை கண்முன் எடுத்துவைக்கிறது. உண்மையில் இருந்து  புறண்டு ஒரு உயிர் இழிவில் கனவில் மதுவில் போலி உலகை கண்டு அடைவதைக்காட்டுகின்றது. 

பகவான் ஸ்ரீராமகிருஷ்ணர் குருவானாவர்கள் மூன்றுநிலையில் இருக்கிறார்கள் என்று காட்டுகின்றார். “சாதாரணமான குரு “உனக்கு இந்த இந்த நோய் இன்ன மருந்து சாப்பிடு“ என்று சொல்வதோடு நிறுத்திக்கொள்ளும் மருத்துவன் போன்றவர் என்றும். நடுத்தரமானகுரு “உனக்கு இந்த நோய் இந்த மருந்து சாப்பிடு என்று சொன்னேன் சாப்பிட்டாயா?“ என்று நினைவும் ஊட்டும் மருத்துவர் பொன்றவர் என்றும். உத்தமமான குரு “உனக்கு இன்னநோய், இந்த மருந்துசாப்பிட்டாயா“ என்று கேட்டுவிட்டு சாப்பிடவில்லை என்று தெரிந்ததும் நோயாளியை படுக்க வைத்து நெஞ்சில் கால்வைத்து அழுத்தி மருந்தை புகட்டிவிட்டே செல்லும் மருத்துவர்போன்றவர் என்கிறார்.

நாரதர் உத்தமமான குரு. இந்தரனுக்கு அவனை அடையாளம் காட்டுவதற்கு அவன் தலையில் குட்டுவைத்து சுடுமணலிலும் போட்டு வாட்டுகின்றார். 

வெற்றிலும் தோல்வியும் மனிதனை ஒளியுலகபோதையிலோ, இருள்உலகபோதையிலோ அழுத்தி வைக்கிறது. அதற்குள் இன்பமாக இருப்பதாகவே மனிதன் எண்ணுகின்றான். தலையில் குட்டி புரட்டிவாட்டும் குருவினால்தான் போதையும் தெளிகிறது புது உலகமும் புரிகிறது. கடமையும் கைக்கூடுகின்றது. 

ராமராஜன் மாணிக்கவேல்