Thursday, December 15, 2016

எல்லை




மனம் நேற்று வெற்றிடத்தில் விழுந்தபோது சொல்வளர்காடு நினைவுக்கு வந்தது.

//சகதேவன்மானுட எல்லைக்கு அப்பாற்பட்ட எதையேனும் அடைந்தவர்கள் இரக்கத்திற்குரியவர்கள்என்றான்.//

மானிடன் மட்டும் அல்ல உயிர் உள்ள உயிர் அற்ற எல்லா ஜீவன்களும் எல்லை கடக்கும்படியாகவே புடவி தனது ஒவியத்தூவியை வளைக்கிறது. அந்த எல்லைக்கடத்தலே ஒரு ஒவியமாக அமைகின்றது. அது நன்மையா தீமையா என்பது எல்லாம் புடவிக்கு இல்லை. புடவிக்கு ஓவியம் வேண்டும் அவ்வளவுதான்.

இங்கு வெண்முரசு சுட்டுவது எல்லைக்கடந்து செல்வதைப்பற்றி அல்ல எல்லைக்கு அப்பாற்பட்ட எதையேனும் அடைந்தவர்களைப்பற்றி. எல்லைக்கு அப்பாற்பட்ட எதையேனும் அடைந்தவர்கள் அடைந்தவற்றால் உலகுக்கு பெரிதாக தெரிகிறார்கள். ஆனால் அவர்கள் தங்களுக்கு சிறிதாக இரக்கத்திற்கு உரியவர்களாக ஆகிவிடுவதை அவர்களாலும் அறியமுடியாத நுண்மையில் பிரபஞ்சம் அறிகின்றது. பிரபஞ்சம் அறியும் அந்த நுண்மையை மனிதன் அறிந்தால் மனிதன் என்னாவான்? லீலையில் விளையாடமாட்டான், அவன் விளைாயாடவேண்டும் அதற்காக னிதனின் கண்களை பிரபஞ்சம் கட்டிவிட்டு விளையாட சொல்கிறது. பிரபஞ்சத்திற்கு விளையாட்டு நடக்கவேண்டும். காரணம் தனது அசையாமையில் இருந்து தனது லீலைக்குவந்த பிரபஞ்சம் விளையாடலால் நிறைகிறது. இந்த விளையாடலை அறிந்துக்கொள்ள விளையாடிக்கொண்டே விளையாட்டுக்கு அப்பால் இரு என்கிறது புடவி. ஆனால்  ஆணவம் அவ்வளவு எளிதில் விளையாட்டுக்கு அப்பால் இருந்து விளையாட விடுவதில்லை.

// நகுலன் அவன் சொன்னதை விளங்காமல் கேட்டுவிட்டுஆனால் அத்தனை மானுடரும் மானுடருக்குரிய எல்லைகளை மீறுவதற்காகத்தானே முயன்றுகொண்டிருக்கிறார்கள்? அவ்வெல்லைக்கோட்டில்தானே முட்டிமோதுகிறார்கள்?” என்றான். “ஆம், அந்த ஆணவமே இப்புவியிலுள்ள அனைத்தையும் படைத்தது. இங்கு இத்தனை துயரையும் நிறைத்ததுஎன்றான் சகதேவன். “நீ மூத்தவரைப்போல் பேசத்தொடங்கிவிட்டாய்என்றான் நகுலன். சகதேவன் புன்னகைத்தான்.//

வெளியே இடி மின்னல் மழை என்று பெய்துக்கொண்டு இருக்க உள்ளே மூட்டப்படும் ஆனல் எரியும் பிரமகபாலத்தில் பிரசண்டன் பிரசன்னர் பிச்சாடனர் இருக்கிறார்கள். ஒருவன் புடவியை கதையாக்கிக்கொண்டு, ஒருவன் புடவியை தத்துவமாக்கிக்கொண்டு, ஒருவன் புடவியை பித்தென்று புன்னகைத்துக்கொண்டு. எல்லாமம் ஒரு தலைதான். குகை ஆழத்தில் இருளில் எங்கோ இருந்தும் இல்லாததுபோல் ஆன்மகிளி வழி அறிந்தும் வழியறியாமலும் பறக்கவும் பறக்கமுடியாமலும் பார்த்துக்கொண்டு இருக்கிறது.  

உடல்  கர்மகளால் கட்டப்பட்ட மகாவீரியம், உடல் அன்னத்தை உண்ணும் அன்னத்தால் கட்டப்படும் அலைக்கடலை எதிர்த்து நிற்கும் பெரும் புற்றுகபுரி. இறுதியில் அது ஒரு வாள் இருந்த உறை மட்டும். 
  
//உறையிருந்த வாள் என்று அவ்வரண்மனை தோன்றியது. உறையின் வடிவும் கூரும் இருந்த வாளினால் அமைவது. இன்மையென வாள் அதனுள் எப்போதுமிருந்தது.//

உள்ளே இருந்த கிளியே நீ உள்ளே இருக்கும்போதும் வெளியே பறக்கும்போதும் நீ அப்படியேதான் இருக்கிறயாய், உனக்கு ஒன்றும் ஆவது இல்லை. நீ தீயால் சுடப்படுவதில்லை

ஆர்