Tuesday, December 6, 2016

தொல்மூதாதையாக. வருணன்





ஜெ

இந்நாவலில் இந்திரனுக்கு முன்னரே வருணன் பெரிய உருவத்துடன் எழுந்துவந்துவிட்டான். தொல்மூதாதையாக. வருணன் பெருந்தெய்வமாக இருந்தபோது மழையும் கடலும்தான் மக்களுக்கு அணுக்கமானவையாக இருந்திருக்கவேண்டும். பின்னர் இமையமலையடிவாரத்துக்கெல்லாம் குடியேரியபோது இடியும்மின்னலும் தெய்வமாக ஆகியிருக்கலாம். அதுவே இந்திரன் வருணனை அழித்த கதையாக வருகிறது

ஆனால் வருணன் ஒரு அசுரனாக இருந்து தெய்வமாக ஆகிறான் என்பது ஒரு பெரிய புரிதலை அளித்தது மகாபாரதத்தையே ஒருவகையில் நுட்பமாகப்புரிந்துகொள்வதற்கான சாவி இது என நினைக்கிறேன். யாதவன் தெய்வமாகிக்கொண்டிருப்பதைத்தானே அங்கே நாம் பார்க்கிறோம்?

சரவணன்