Monday, December 12, 2016

ஃபாஸம் பிரதிஃபாஸம்



சாதாரண வாசகன் உளறல்போலவோ வெறும் வார்த்தைகள் போலவோ கடந்துசெல்லும் வரிகளால் ஆன இந்த அத்தியாயத்தை இந்நாவல் முடிந்தபின்னர் தனியாகத்தான் வாசிக்கவேண்டும் என நினைத்துக்கொண்டேன். அத்வைதத்தின் உலகக்காட்சியின் அற்புதமான சித்தரிப்பு இது

உணரப்படுகையிலேயே பொருள் உருக்கொண்டது. 
உணரப்படும் வடிவை அது சூடியது. 
உணர்வுக்கேற்ப உருமாறியது. 
மீண்டும் கருநிலைகொண்டது. 


அந்த காட்சி நுண்மையாகி நுண்ணணுவாகி அணுவ்வுக்குள்ளும் அதே மாண்புடன் இருக்கிறது

நுண்ணணு வடிவ மாமலைகள். 
நுண்துளிக் கடல்கள். 
ஒளித்துளியென வானம். 
அங்கே ஒவ்வொன்றும் ஆயிரம்கோடிமடங்கு எடைகொண்டு 
கணத்திற்கு ஆயிரம் மடங்கென எடைபெருகின. 

இருத்தலும் இன்மையுமாகி அவை ஒரு முடிவில்லாத நடனத்தில் இருந்துகொண்டிருக்கின்றன. 

எடைமிகுந்து அவை இன்மையென்றாகி 
அவ்வெல்லையில் சென்றுமுட்டி 
மீண்டும் எடை இழந்து மீண்டுவந்தன.

அத்வைத வகுப்பில் பிரபஞ்சம் ஃபாஸம் என்றும் பிரதிஃபாஸம் என்றும் மாறிமாறி உருவம் கொள்வதை விளக்கு விளக்கு என விளக்குவார்கள். இந்த சுருக்கமான கவிதை அதை ஒரு படிமமாகவே சொல்லிவிடுகிறது

ஆனால் இத்தகைய வரிகளை இப்படி உரைநடை ஓட்டத்தில் சொல்லிவிட்டுச்சென்றால் வாசகர்கள் கவனிப்பதற்கான வாய்ப்பு மிகக்குறைவு

சிவா