Wednesday, December 7, 2016

செதுக்குவது



சிற்பி மும்முகன் என்னும் மலையிடம் இதைச் சொல்கிறான். மலையை வடிவம் இல்லாதது, வடிவங்களுக்கே எதிரானது என்கிறார் நாரதர். அந்தவடிவமின்மையை வடிவமாகச் செதுக்குகிறார்கள். வடிவமில்லாமல் என்பது ஈகோ இல்லாமல் இருப்பது. இவர் அதில் செதுக்குவது ஈகோவைத்தான்

உன்னிலிருந்து விலகிச்செல்லும் இந்தக் கற்சில்லைப் பார். பொருளற்றது என நீயே காண்பாய். பொருள்கொண்ட ஒன்றிலிருந்து பொருளின்மை எப்படி விலகிச்செல்லமுடியும்? அப்படியென்றால் அது உன்னுடையதல்ல என்றே பொருள்

என்றவரி அதை தெளிவாகவே காட்டுகிறது. தனக்கு என ஒரு அடையாளம் தேவை என்றும் அந்த அடையாளம் இல்லாதது எல்லாம் தான் அல்ல என்றும் நினைக்கும் இடம்தான் ஈகோ உண்டாகும் இடம். அது உண்டானதுமே தலையை வெட்டிவிடுகிறார்கள்

அந்த அடையாளம் உன்னுடையது அல்ல. அது சிற்பி உனக்கு அளிப்பது என மன்றாடுகிறார்கள். ஆனால் அது மும்முகன் காதில் விழவில்லை. ஈகோவின் வலிமை அப்படி

மனோகர்