அன்புள்ள ஜெ
வெண்முரசில் மீண்டும் மீண்டும் தேவதைகள் யட்சிகள் வந்து ஆழ்மனதை பரிசீலிக்கிறார்கள். இது புராணங்களுக்குரிய ஒரு மோட். அதைவைத்துக்கொண்டு ஒவ்வொருமுறையும் நுட்பமாக உள்மனது செயல்படும் விதத்தை நீங்கள் ஆராய்கிறீர்கள். அதிலுள்ளது ஒரு விளையாட்டு. நாம் இப்படி இப்படி என நினைப்போம். அதைக்கடந்துசென்றிருக்கும் நீங்கள் சொல்லும் உண்மை.
நான் அர்ஜுனன் மனதிலிருப்பவள் யார் என கணக்கிட்டுக்கொண்டே வந்தேன். அந்த முடிவு வந்ததும் அடாடா இதல்லவா நான் சொல்லியிருக்கவேண்டியது என்றும் தோன்றியது. கூடவே இதை உள்ளூர ஊகித்திருந்தேனா என்ற சந்தேகமும் வந்தது. கிளஸிக் வகை எழுத்தில் அதிரடியாக எதையும் சொல்லமுடியாது. ஆனால் எதிர்பாராதபடிச் சொல்லவேண்டும். இரண்டும் நிகழ்ந்திருக்கிறது இந்தக் கதப்பகுதியில்
ஜெயராமன்