ஜெ
வெண்முரசின் முழுமையை உணர
இன்னும் நெடுங்காலமாகும். ஆனால் இத்தனை ஆயிரம் பக்கங்களினூடாக மெல்லமெல்ல ஒரு பெரிய
திட்டம் ஒரு தரிசனம்போல எழுந்து வருவதைப்பார்த்துக்கொண்டிருக்கிறேன். அதை மானுடம் வேதங்களை
உருவாக்கி அதை வளர்த்து எடுத்துக்கொண்ட வரலாறு என்று சொல்லத் தோன்றுகிறது.
ஆதிவேதங்கள். பின்னர் சடங்காக
வேதம். பின்னர் ஞானமாகக் கனிந்த வேதம். ஆதிவேதம் காய். பின்னர் வந்தது கனி. வேதாந்தம்
அதன் சாறு. அந்த பரிணாமத்தையே நாவல்கள் காட்டுகின்றன
ஆனால் ஆச்சரியமென்னவென்றால்
முதற்கனல்முதலே இந்தச் சித்திரம்தான் உள்ளது. அது விரிவாக பேசப்பட இவ்வளவு நகர்ந்துவரவேண்டியிருந்தது.
வெண்முரசு என்னும் தலைப்பே போரையும் வெற்றியையும் இலக்காக்கிய சிவந்த வேதத்திற்குப்பதில்
அறம் மட்டுமேயான ஒரு வெண்ணிறவேதத்துக்கான தேடல்தான்
சாரங்கன்