Sunday, December 11, 2016

அழகு




ஆடுவதே அழகென்றாகிறது. 
இதோ கைநீட்டி அணுகுகிறது மதலை.
 துள்ளி ஓடி ஒளிந்து சிரிக்கிறது இளமை. 
இடையொசிய தயங்குகிறது கன்னிமை.
 முலைபெருத்து வளைகிறது தாய்மை. 
மகிழ்கிறது காதல். 
உள்ளம் நெகிழ்கிறது காமம்.
 உள்ளுருகி வழிகிறது கனிவு. 
உடலில் நிகழ்கின்றன ஐம்பருவின் அசைவுகளனைத்தும். 
பாறையென உருள்கின்றன யானைகள். 
அனலென பாய்கின்றன புலிகள். 
காற்றெனச் சுழல்கின்றன பறவைகள். 
நீரென ஓடுகின்றன நாகங்கள். 
பெண்ணுடலில் நிகழ்கின்றன 
உடலென்றான அசைவுகள் அனைத்தும். 

ஒரு முழுமையான கவிதை ஜெ. சாதாரணமாக உரைநடைவழியாக கடந்துசெல்கிறது இது என்பதே வெண்முரசு சொல் எண்ணிப்படிக்கவேண்டியதென்பதற்கான காரணம். இந்தவரி ஒரு நடனத்தின் சித்திரம். நடனமாடினாள் என்று சொல்லிவிட்டுச்செல்லலாம். ஆனால் நடனம் எனும்போது உண்மையில் என்ன நிகழ்கிறது என்று இந்த வரிகள் சொல்கின்றன

மனோகரன்