Thursday, December 1, 2016

ஆமைகள்



ஜெ

வெண்முரசை வாசிக்க வாசிக்க என்னுடைய மரபின்மேல் எனக்கு ஏற்படும் பயிற்சி ஆச்சரியமூட்டுகிறது. நான் நேற்று கோயிலுக்குச் சென்றிருந்தேன். அங்கே ஆமைகள் கோயில்கோபுரத்தை தாங்குவதுபோல அமைக்கப்பட்டிருந்ததைக் கண்டு ஆச்சரியமடைந்தேன்.

பலமுறை இதைப்பார்த்திருக்கிறேன். இப்போதுதான் அதன் பொருள் புரிகிறது. ஆமைகள் அசைவில்லாதவை. உறுதியானவை. கல் ஆனால் உயிர் உண்டு. அடித்தளமாக அவை அமைவது அழகான கவித்துவத்துடன் உள்ளது என நினைத்தேன். அற்புதமாக இருந்தது அந்த அனுபவம்

வெண்முரசில் ஆமைகள் நடுவே சண்டை வந்து நகரம் சரிவது ஒரு அழகிய உருவகமாக இருந்தது

சிவக்குமார் செல்வன்