Friday, December 9, 2016

நிறம்






அன்புள்ள ஜெ

வெண்முரசின் அர்ஜுனனின் சொர்க்கம்புகுதலை பலமுறை வாசித்தேன். இப்பகுதியின் செறிவான படிம அடுக்குகளை எளிதில் பிரித்துப்பொருள்கொள்ள முடியாது. உதாரணமாக அந்த ஏழு மேலுலகங்களுக்கும் ஒரு கலர் ஸ்கீமா இருக்கிறது, நம் மரபில் நிறம் என்பதே ஒருவகையான குறியீடுதான். ஒவ்வொரு நிறமும் ஒரு குணம். செந்நிறம் ரஜோகுணம். வெண்மையும் பச்சையும் சத்வம். நீலமும் சாம்பலும் தமம். மற்ற நிறங்கள் அதன் கலவைகள். அந்தவகையில் இந்த நிற அமைப்பை பார்த்தால் சொர்க்க உலகங்களைப்பற்றிய ஒரு பெரிய சித்திரம் கிடைக்கிறது

கூடவே இதெல்லாம் ஒருவகையான யோகமாயைகள்தான் என்றும் தோன்றியது

சாரங்கன்