Sunday, December 4, 2016

மாமனிதர்களின் சலிப்பு






ஜெ

விருத்திரன் குடித்து நிலையழிந்து அமர்ந்திருக்கிறான் என்பது மேலோட்டமாக வாசித்தால் கிடைக்கும் அர்த்தம் .ஆனால் அவன் மேல் குரட்டைச்சத்தமாக வரும் நித்ராதேவி சொல்லும் வரிகள் அவனை மேலும் கூர்மையாக நோக்க உதவுகின்றன

உலகியலில் மிகப்பெரிய வெற்றியை அடையும் பலர் அந்த வெற்றியை ஏன் அடைகிறார்கள் என்றால் அவர்கள் உலகியலை விட மிகவும் மேம்பட்டவர்கள் என்பதனால்தான். அவர்க்ளால் இதை எல்லாம் எளிதில் வென்று கடந்துசெல்லமுடிகிறது

விருத்திரன் தவம் ஏன் செய்தான்? மற்றவர்கள் ஏன் அதைச்செய்யமுடியவில்லை? அவனுக்குத் துறப்பது மிகவும் எளியவிஷயம். ஆகவே ஜெயித்தான். [உதிர்த்து உதிர்த்து அவர்கள் அடைந்தவையே அனைத்தும்.] 

ஜெயித்தபின் அதில் திளைக்க அவனால் முடியவில்லை. அது மிகவும் சின்ன விஷயம். அவர்கால் உல இன்பங்கை பெரிாகினைக்குடிய. அதற்குமேல் செல்லவும் முடியவில்லை

மாமனிதருக்குள் வாழ்வது எளிதில் சலிப்பு கொள்கிறது. என்ற வரி துணுக்குறச்செய்தது. மாமனிதர்கள் எளிதில் சலிப்பு கொள்கிறார்கள். ஒருகட்டத்தில் விட்டுவிட்டுச்சென்றால்போதும் என நினைக்க ஆரம்பிக்கிறார்கள். ஆகவேதான் குடிக்கிறார்கள்

நான் முக்கியமான சில கம்யூனிஸ்டுத் தோழர்கள் குடியால் அழிந்ததைப் பார்த்திருக்கிறேன். அவர்களை இப்போதுதான் புரிந்துகொள்கிறேன்

செம்மணி அருணாச்சலம்