ஜெ
இந்நாவலில் பிச்சாண்டவர்,
சண்டர், பிரசண்டர் , கபாலர் என சைவர் ஒருவரால் கதைகள் சொல்லப்படுகின்றன. ஆகவே மொத்தக்கதையுமே
சிவனால் சொல்லப்படுவதுபோல ஒலிக்கிறது. பிரசாந்தர் என்றும் சிவனைத்தான் சொல்கிறீர்கள்.
அமைதியான சிவன். சிவனால் சொல்லப்படும் கதைகளின் பலவகையான நிறங்களால் ஆனது கிராதம்.
கபாலர் ஒருகதைசொல்ல
பிரசாந்தர் இன்னொரு கதை சொல்லும் இடம் அழகானது. அங்கே பிச்சாண்டவர் ஒரு சொல்லும் சொல்லாமல்
அமர்ந்திருக்கிறார். அந்த இடத்தைமிகவும் ஆன்மிகமான அம்சமாக நினைத்தேன்
சந்திரமௌலி