ஜெ
இந்த ஒருவரிக்காக
உங்களுக்கு நூறு முத்தம்.
தோள்களின்
தாமரைநூல் போன்ற வளையக்கோடுகள்.
பொற்சங்கிலி
ஒன்றின் ஒளிமட்டும் விழுந்ததுபோல.
கணுக்கணுவாக பெண்ணை
வர்ணித்தவர்கள் கூட சொல்லாத ஒன்று பெண்ணுடலில் கழுத்தில் அணிபோல அமையும் மேன்மையான
மலர்க்கோடு. அதை இப்படி வர்ணிக்கமுடியும் என்றால் நீர் மலரினும் மெல்லியதன் செவ்வி
அமைந்தவர் சரியா?
சுப. முருகானந்தம்