Thursday, December 15, 2016

நால்வர்

 
 
 
ஜெவின் தமிழ்ப் புலமை என்றுமே வியப்பூட்டக்கூடியது. இன்று(கிராதம் 56) சனகாதி முனிவர் நால்வருக்கும் (இவர்கள் நால்வருக்கும் தான் தென்திசை இறைவன் - தட்சிணாமூர்த்தி, கல்லால மரத்தின் கீழிருந்து மோனத்தவத்தில் ஞானம் அருளினான்) அவரவர் பெயரின் பொருளைத் தந்திருக்கிறார்.


சனகர் - என்றுமுள தொன்மை
சனாதர் - ச + அநாதர் - எக்காலமும் அழிவின்மை
சனந்தனர் - ச + அனந்தர் - குன்றாஇனிமை
சனத்குமாரர் - ச + குமாரர் - வளரா இளமை

சன என்ற சம்ஸ்கிருத சொல் - பழமையான, தொன்மையான என்ற பொதுப் பொருள் தருவது. அதற்கு நான்கு வித பொருத்தமான தமிழ்ச் சொற்கள். வெண்முரசின் சிறப்புகளில் ஒன்று அது வாசகருக்குத் தரும் பரந்து பட்ட சொற்கள் மற்றும் சொல்லாட்சிகள். 

அன்புடன்,
அருணாச்சலம் மகராஜன்