Thursday, December 1, 2016

விருத்தியடைபவன்



அன்பு ஜெ

விருத்திரன் என்றால் விருத்தியடைபவன் என பொருள் கொள்ளலாம். போர்த்துபவன் மூடிக்கொள்பவன் என்று விக்கிப்பீடியாவில் வாசித்தேன். அந்த அர்த்தம் புற்றுகளுக்கு மிகச்சரியாகப்பொருந்துகிறது. சலிக்காமல் வளர்ந்துகொண்டே இருக்கக்கூடியவை. அழியாதவை. விருத்திரன் புற்றுக்களை தன் கட்டுக்குள் கொண்டுவந்தான் என்பது அழகான ஒரு நவீன தொன்மமாக தெரிகிறது

இந்தப்பகுதிகள் மிகச்செறிவாக இருக்கின்றன. கதை மிகவும் தொன்மையானது என்பதனால் அதற்கு ஒரு டெம்ப்ளேட் இருக்கிறது. அதை கற்பனைகொண்டு நீங்கள் நிரப்பிக்கொண்டு செல்லும் இடம் சிறப்பாக உள்ளது

உதாரணமாக திரிசிரசின் மூன்றுதலைகளும் தச்சனால் கொண்டுசெல்லப்பட்டு அமராவதியில் வாசல்களில் வைக்கப்பட்டன என்று சொல்லி அவை ஒவ்வொன்றிலும் ஒவ்வொருவர் செல்லலாம் என்று சொல்லியிருக்கும் இடம். நீங்கள் நவீன இலக்கியத்தில் எப்போதும் ஒருமீறலும் துடுக்கும் இருக்கும் என்று சொல்வீர்கள். அது வெளிப்படும் இடம் அது


சுவாமி .