வணக்கம்.
1) அர்ஜுனன் கண்ட வட்ட வானவில்லை இங்கு நாமும் காணலாம்
2) கஜசம்ஹாரம், சூரசம்ஹாரம், மகிஷாசுரவதம் - சம்ஹாரத்திருக்கும் வதத்திற்கும் வித்தியாசம் உண்டா?
3)
"நீல"த்தில் கிருஷ்ணனுக்கு தாய் போல் உணர்ந்தவன் "திருணவிரதன்". இங்கு
அர்ஜுனனுக்கு தாய் போல் உணர்பவள் "திருணமூலி". "திருண" என்ற சொல்லின்
அர்த்தம் என்ன? (தேடினேன் கிடைக்கவில்லை)
4)
வெண்முரசில் சந்திரகுல மூதாதையரில் சிலரின் கதையே வந்திருக்கிறது.
மற்றவர்களை பற்றியும் வர வேண்டும் என எதிர்பார்க்கிறேன். மேலும் துரியோதனன்
எவ்வாறு பாண்டவரின் பிள்ளைகளுக்கும் சேர்த்து "பெரீந்தை"யாக இருக்கிறார்
என்பதையும் அறிந்து கொள்ள ஆவல்.
நன்றி.
இப்படிக்கு,
சா. ராஜாராம்,
கோவை.
அன்புள்ள ராஜாராம்
1 வதம் என்றால் கொல்வது. சம்ஹாரம் என்றால் முற்றழிப்பட்து. ஸம் என்பது முழுமையாக என பொருள்வரும் சொல். ஆனால் இரு சொற்களும் மாறிமாறித்தான் பயன்படுத்தப்படுகின்றன
2 திருணம் என்றால் புல்
3 துரியோதனன் பாண்டவர்களுக்கு மூத்தவன். ஆகவே பெரியதந்தை. அவர்கள் ஒரே குடும்பம் அல்லவா
ஜெ