ஜெ
வெண்முரசின் அர்ஜுனன் ஒரு அபூர்வமான குணாதிசயம் கொண்டிருக்கிறான். திரும்பிப்பார்ப்பதே இல்லை. எங்கும் அவன் திரும்பிப்பார்க்காமல் எல்லாவற்றையும் விட்டுவிட்டுச் செல்கிறான். காமம், உறவுகள், பிள்ளைகள் எல்லாவற்றையும் கடந்துசெல்கிறான். அவனுக்கு எங்கும் பிடிமானமே இல்லை. பாலைச்சிற்றூரில் அவன் பிள்ளையுண்டான மனைவிகளை விட்டுவிட்டுச் செல்வது ஒரு அற்புதமான காட்சி
ஆனால் ஒரே இடத்தில் அவன் திரும்பிப்பார்க்கிறான். விட்டுப்பிரிபவர்களை நினைத்து ஏங்குகிறான். அவனை சாவுகடல் அருகே விட்டுவிட்டுச் செல்லும் சீனவணிகர்களை. பாலைவனம் அவனை அப்படி ஆக்கிவிட்டது
செந்தில்குமார்