ஜெ
அற்புதமான இரு வரிகள்.
“தன்னைத்தானே அழிக்கும் சுவை ஆண்களுக்கு தெரியும்,
பெண்கள் அதை உணரமுடியாது”
“அன்னையென்றில்லாது நீங்கள் இருப்பதில்லை.
சூதுக்களத்திலல்லாது நாங்களும் வாழ்வதில்லை”
நானே இதைபபற்றி எண்ணிக்கொண்டிருக்கிறேன். ஏன் ஆண்களுக்குக் குடிமேல் இத்தனை ஆர்வம் என்று. தன்னைத்தானே அழிக்கும் விஷயங்களை எல்லாமே ஆண்கள் பாய்ந்துபோய் பிடிக்கிறார்கள். பழங்காலத்தில் போர் இதைப்போல இருந்திருக்கலாம். பிஸினஸ் கூட அதேபோலத்தான்
ஆனால் பெண்கள் அப்படி இல்லை. அவர்களால் விடுபடமுடிகிறது. தடுக்கவும் முடிகிறது காரணம் அவர்களுக்குள் இருக்கும் அம்மாதான். அவள் பிள்ளைகளைத்தான் நினைக்கிறாள். அது அவளைக்காப்பாற்றுகிறது
தன்னைத்தானே அழித்துக்கொண்டு சத்குரு அருளால் மீண்ட
சிவராமன்