Wednesday, January 10, 2018

வெண்முரசு – நூல் பதினாறு–‘குருதிச்சாரல்’–22


.குந்தியின்   ஆழ்ந்த  உள்ளத்தில்  சொல்லெடுக்காமல்  உரைத்த, தன்  கொழுநன்  பாண்டுவின் கனவை , இவ்வளவு  காலங்களுக்கு  பின்பு விரிவாக  பாண்டவர்களுக்கு  கூறிவிட்டாள் . யாரும்  சொல்ல  துணியாத  வார்த்தையால் – தன்னை பரத்தை  என்று  சிறுமைப்படுத்துவதே  திருதராஷ்டர் விடுத்த  தூதின் மையக்கருத்து  என்று  சொல்லாமல்  சொல்லிவிட்டாள் - .மஹாபாரத ஆரம்பத்தில்  இருந்தே  குந்தி  திருதராஷ்டிரரின்  பாண்டவர்கள்  மீதான அன்பை  சந்தேகித்தவள் தான் 


-உதாரணத்திற்கு  -  வெண்முரசு - நூல்ஐந்து –  பிரயாகை – 46  - அர்ஜுனன்  “அன்னையேநாம் யாரை  அஞ்சுகிறோம்? ” என்றான்குந்தி  “உங்கள் பெரிய  தந்தையை..”  என்றாள்தருமன்  “அன்னையேஇது …” என்று ஏதோ  சொல்லத்தொடங்க  “நன்றாக எண்ணிப்பார் நம்மை  இங்கு வாரணவதத்திற்கு அனுப்பியவர்யார்அனுப்புகையில்  அவர் சொன்ன  சொற்கள்  என்ன?”  என்றாள்  குந்தி.  தருமன்  நினைவுகூர்ந்துஇங்கே  நமக்கு  மிகச்சிறந்த  மாளிகை அமைக்கப்பட்டிருப்பதாகச்  சொன்னார்இம்மாளிகையில்  நம்மை ஒளி  சூழ்ந்துகொள்ளட்டும்  என்றார்களிறுகொண்டானின்  பாதங்களில்நமக்கு  நிறைவு கிடைக்கட்டும்  என வாழ்த்தினார்  என்றான்.


ஆம்அவரது  அகம்  அச்சொற்களில்  அறியாமல் வெளிவந்து விட்டதுநம்மைநெருப்புசூழும் என்றும்  நாம்  இறந்து  அமைதிகொள்வோம்  என்றும்தான்  சொல்லியிருக்கிறார் என்றாள்  குந்தி.“அன்னையே  என்றபின் அர்ஜுனன்  நிறுத்திக்கொண்டான்.  “அதுவேதான்..  எனக்கு ஐயமே  இல்லை.  இது  அரசரின்  சதி 


ஆம் அன்றிலிருந்து இன்றுவரை குந்திதிருதராஷ்டர்  ,பாண்டவர்களை  திருதராஷ்ட மைந்தர்களுக்குச்  சரிசமமாக  நடத்தவில்லை  என்று கூறியது ச ஞ்சயனின்  தூதால்மெய்ப்பிக்கப்பட்டது  .எந்த ஒரு நிலமும்  கொடுக்கப்படாமல் ,வஞ்சத்தை  ஒழித்து பாண்டவர்கள் பூமியில் எஞ்ச வேண்டும்  என்று தன்மைந்தர்கள்  மேல் உள்ள அபரிதமான  பாசத்தால் பாண்டவர்களுக்கு  அவர் சொல்லளிக்கிறார்அதை அவர்கள்  ஆணையாக  கொள்வார்கள் என்பதை உறுதியாக  அறிந்தே இதை செய்திருக்கிறார்  .ஆனால்  குந்தி பாண்டவர்களுக்கு  ஒரு  பெருஉண்மையை  தெள்ளத்தெளிவாக  விளக்கி விட்டாள்  . பெரிய தந்தை சொல் பணிவது  பாண்டுவின் கனவுக்கு இழுக்கு  .அவளின் கற்பினுக்கு களங்கம்  என உணர்த்தி விட்டாள்.கடந்த அத்தியாயங்களில்  துட்சாதனன் துணைவி அசலை  சத்தியவான் சாவித்திரிக்கு நிகராக –

 ஆனால்  கொழுநனுக்கு  அன்றி  தனதுமைந்தருக்காக  நடத்திய  போராட்டங்களை  வாசிக்க நேர்ந்தது .பீஷ்மர் , துரோணர்   மற்றும் திருதராஷ்டர்  ஆகியோரை  சந்தித்து தன் மைந்தர்நீண்டகாலம்  உயிர்வாழ அனைத்து முயற்சிகளையும்  எடுப்பதை காண  முடிந்தது . மிக்க நன் றி  ஜெயமோகன்  அவர்களே . கடேசியாக வெண்முரசு – நூல் பதினாறு–‘குருதிச்சாரல்’–

 17 அசலை “சஞ்சயரேபேரரசர்  இச்செய்தியை பேரரசியிடம்  சொல்லலாகாதென்று சொன்னாரா?” என்றாள்.
  “ஆம் அரசிஅவ்வாறு கூ றினார்.சஞ்சயரேபேரரசியிடம்  சொல்லவேண்டியதில்லை என ஏன் சொன்னார்  பேரரசர்?” என்றாள். “அதை நாம்  எவ்வாறு சொல்லமுடியும்?  கணவன் அறிந்த மனைவியை பிறர் அறிவதில்லை  என்றபின் புன்னகைத்த சஞ்சயன்விடைகொள்கிறேன்அரசியரே என்றான். ஆனால் இன்று குருதிச்சாரல்’–


22  குந்தியின்  ஆவேச உரையை  படித்தபின்புதான் ஓர் உண்மைதெரிந்தது . குந்தி இவ்வாறு தான்   வினையாற்றுவாள்  என்று காந்தாரி உய்த்துணர்ந்து  இருப்பாள் . அப்படியென்றால் குந்தி  சிறுமைப்பட்டுநிற்கும் நிலையை  தன் மனக்கண்ணில்  நிறுத்தியதால் சஞ்சயன்  தூதை கட்டாயம் தடுத்திருப்பாள் . ஏனென்றால்   காந்தாரி அறிவாள்  தன்கொழுநன்   பாண்டவர்களுக்கு விடுக்கும்  சொல் - நிலமின்றி ,முடியின்றி வாழுங்கள்  என்பது பாண்டவர்களின் குலமகள் திரௌபதியை துரியோதனன்  சிறுமைப்படுத்தியத்துக்கு நி கரானது -ஆம் துரியோதனன்  தந்தை பாசம் ,என்னும்  பகடைக்காய்கள் கொண்டு பாண்டவர்களின்   மூதன்னை  குந்தியை  சிறுமைப்படுத்த முயற்சிப்பதை கற்புக்கரசி  காந்தாரி விரும்பமாட்டாள்   இதையெல்லாம் உணர்ந்தே  திருதராஷ்டர்சஞ்சயன் தூதை காந்தாரியிடம்  மறைக்க துணிந்திருப்பார் .நன்றிகள் ஆயிரம் கோடி  ஜெயமோகன் அவர்களே . 

முனைவர் திசெந்தில் 

 ஸ்ரீவில்லிபுத்தூர்