Thursday, January 11, 2018

உறவின் சித்திரம்



ஜெ,

சகாதேவனுக்கும் விஜயைக்குமான உறவின் சித்திரம் மிகச்சிக்கலானது. அவளுக்கு அவனைப்பற்றிய நினைப்பே இல்லை. அவள் தன் இளமைக்கு மானசீகமாகத் திரும்பி அங்கே வாழ்கிறாள். ஆனால் அவன் மகனைப்பற்றிப் பேசும்போது அருகே வந்துவிடுகிறாள். அவர்கள் அதன் நெகிழ்வில் உறவுகொள்கிறார்கள். ஆனால் அதனுடன் காதலனின் நினைப்பும் ஊடுருவுகிறது. அது ஆழமான காரணம்

ஆனால் அடுத்தமுறை அவன் அவள் நெருங்காமலிருக்கையில் மீண்டும் மகன் என்ற அஸ்திரத்தைப் பயன்படுத்தும்போது அது தவறாகச்சென்றுவிடுகிறது. அவளுக்கு அது ஒவ்வாமையை அளிக்கிறது. ஏனென்றால் அவள் இருப்பது வேறு ஒரு மனநிலையில். விஜயையின் மனசுக்குள் பூரிசிரவஸும் கண்ணனும் இருப்பது வெவ்வேறு இடங்களில் என்பதுதான் இதன் சாராம்சம் என நினைத்தேன்


சித்ரா