Thursday, January 25, 2018

இருவகை உச்சங்கள்



அன்புள்ள ஜெ

வெண்முரசின் இப்போதைய இடங்கள் அனைத்துமே உணர்ச்சிகரமானவை. திருதராஷ்டிரரை துச்சலை சந்திக்கும் இடம் உச்சகட்ட உணர்ச்சிகளினால் ஆனது. கொந்தளிக்கிறார். ஆனால் அன்னையாகிய காந்தாரியைச் சந்திக்கும்போது எல்லாமே உள்ளடங்கியவையாக உள்லன/ அங்கே உண்மையில் என்னவகையான உணர்ச்சிவெளிப்பாடுகள் நடந்தன என்பதே சரியாகப்புரியவில்லை. அன்னையும் மகளும் தழுவிக்கொள்ளவில்லை. அன்புவார்த்தை சொல்லவுமில்லை. அன்னைக்கும் மகளுக்கும் உண்மையில் என்ன உறவு என்பதே சரியாகப்புரியவில்லை.

அன்பை மறைக்கிறார்களா அல்லது அவர்களுக்கிடையே சரியான உரவு இல்லையா? எனக்கு என்ன தோன்றுகிறதென்றால் அவளை திருதராஷ்டிடர் தொட்டுத்தழுவிக் கொஞ்சுவதனாலேயே அவளை காந்தாரி ஒரு படி விலக்கியே வைத்திருக்கிறார் என்றுதான். இந்த இரண்டு பகுதிகளையும் வாசிக்கையில் வெண்முரசில் இந்தவகையான இரண்டு வகையான உச்சங்களும் வந்துகொண்டே இருப்பதை ஞாபகம் படுத்திக்கொண்டேன். உணர்ச்சிக்கொந்தளிப்பும் உணர்ச்சியே வெளிப்படாத மௌனமான உச்சமும் மாறி மாறி வருகின்றன


செந்தில்