அன்புள்ள ஜெயமோகன் அண்ணா,
பருத்த உடலை கொண்ட துச்சளை சுரங்கத்தின் வழியே எவ்வாறு செல்வாள் ? அதற்கும் வழி இருந்தது தாரை கண்டு சொன்னாள். என்றாலும் ஒரு அச்சம். அவளை கடைசியாக வரச் சொல்லாதே விகர்ணன் முன்னால் செல்ல அவளை அனுப்பிவிட்டு நீ அவள் பின் செல். ஆம் தாரை அவ்வாறே செய்கிறாள். ஒரு கணம் மூச்சு நின்று தொடர்ந்தது. தாரை செல்கிறபோது வழியில் நீர்த்துளிகள் அவள் மேல் விழுகிறது, மேலே ஏரியாமே? நடுவழியில் இது வேறா ?
சருகில் கால் வைக்க வேண்டாம் கட்டுவிரியன் மணக்கிறது. அச்சம் புலன்களை விழிப்பில்......... சாகசம், அஞ்சுதலின் சுவை. பாலமலை காட்டுக்குள் நண்பருடன் திரிந்து மீண்டது நினைவுக்கு வருகிறது. .
அன்புடன்
விக்ரம்
கோவை