அன்புள்ள ஜெ ,
தேர் வடத்தை பற்றி இழுத்து செல்வது போல , மிகசிலர் தவிர இங்குள்ள ஒவ்வொருவரும் போரை நோக்கி சூழலை நகர்த்துகின்றனர் , தனக்கான காரணத்தை கொண்டு ..
தன்முனைப்பு மனநிலை தானில்லாத ஒன்றை அழிக்கவே விரும்பும் , கரேணுமதியும் ,பிந்துமதியும் விரும்புவது அதுவே , தன்னை கைகொள்ளாத கணவனின் அழிவை , கணவனின் சொந்தங்களின் அழிவை ..
ஆடைகள் களைந்து திரியும் நக்னை போல , உறவுகளை களைந்து நிற்க ..
பீமன் 'நீ நிஷாதி' என சொல்வது 'நீ நக்னை' என்று சொல்வது போல ,
அதிலிருந்து விலகதான் இந்த இரு பெண்களும் தங்களை தொடர்ந்து சத்திரிய பெண்களாக சொல்லி கொண்டிருந்தாள்கள் போல ,இந்த சத்ரியகுமிழி உடைந்ததுதான் பிந்துமதி கிளம்ப எண்ணியதன் காரணம் .
வெண்முரசில் வரும் தோழிகள் , உதவி பெண்கள் பெரும்பாலும் தன் உள்ளிருக்கும் இன்னொரு முகத்தை காட்டும் ஆடிபாவைகள் , மாலதி பிந்துமதியின் இன்னொரு முகம் , கரேணுபதியின் நிலையை அது விரும்புகிறது என எண்ணினேன் .
ராதாகிருஷ்ணன்