Friday, January 19, 2018

கலி



அன்புள்ள ஜெ

துரியோதனன் “ஆம் நான் கலியின் மகன்தான்’ என்று அறிவிக்கும் இடத்தை வாசித்து பதற்றம்போல ஒரு மனநிலையை அடைந்தேன். என்னால் அந்த இடத்தைக் கடக்கவே முடியவில்லை. ஒருபக்கம் அவன் அப்படித்தான் வந்துகொண்டிருந்தான் என்று தெரிகிறது. இன்னொரு பக்கம் அந்தச் சந்தர்ப்பத்தில் மிகச்சிறந்த உத்தி என்றும் தெரிகிறது

நான் கவனித்தது அந்த மக்களின் மனநிலையைத்தான். மக்கள் எவ்வளவு உற்சாகமாக அழிவையும் இருட்டையும் வரவேற்கிறார்கள். கலியை அவன் ஏற்றுக்கொள்வதற்கு சபையே கைதூக்கி ஆதரவளிக்கிறது. இது எப்போதுமே நிகழ்ந்ததுதான். எல்லா ஹிட்லர்களும் மக்களாதரவுடன்தான் பதவியேற்கிறார்கள் இல்லையா?


மகாதேவன்