அன்புள்ள ஜெ
வெண்முரசில் கிருஷ்ணன் அரசு
துறந்து வெறும் யாதவனாக வந்திருக்கும் காட்சி எதிர்பார்த்ததுதான் என்றாலும் ஏனோ உள்ளம்
உருகவைத்தது. அது ஒரு கிளாஸிக் ஜெனித். அவன் போரிடமாட்டான். ஆட்சி இல்லை. குலம் இல்லை.
இருப்பது அவனுடைய ஞானம் மட்டும்தான். அதை மட்டும் வைத்து அவன் ஜெயித்தான் என்பதில்
அற்புதமான ஒரு யூனிட்டி உள்ளது. அதுதான் அவனுடைய சிறப்பு. அந்த அரங்கிலே கிருஷ்ணன்
பேசுவதும் முக்கியமனா சொற்கள்தான். ஒரு நெறியை மீறி இன்னொரு நெறியை எவராலும் பேணிக்கொள்ள
முடியாது. பாண்டவர்கள் கிட்டத்தட்ட அவரிடம் சரணாகதி அடைகிறார்கள். அந்தச்சரணாகதிக்கே
கடைசியில் வெற்றி கிடைக்கிறது
மனோகர்