Friday, January 26, 2018

துரியனின் சித்திரம்



இனிய ஜெயம் 

இன்றைய துச்சளை காணும் துரியனின் சித்திரம் பேரழகு .அந்த அழகின் முன் துச்சளை ஸ்தம்பித்து நிற்கிறாள் .

மீண்டும் இதையே சொல்கிறேன் .வெண்முரசு என்னை அழைத்து செல்லும் கலைகளின் சன்னதியில்  ,நான் நின்ற சன்னதிகளில்  மும்பை எலிபண்டா குகையும் ஒன்று . அங்கே கண்ட மும்முக மகாதேவர் சிலை அதன் பொருள் மொத்தமும் இந்த தருணத்தில் அர்த்தம் பெறுகிறது .

மகாதேவருக்கு மூன்று முகம் .படைத்தல் ,காத்தல் ,அழித்தல் . படைக்கும் முகம் குரூரம் என வடிக்கப்பட்டிருஇந்தது . வெண்முரசின் தீர்க்க தாமஸின் முகம் . கட்டற்ற படைப்பாற்றல் அதன் முகம் குரூரம் . அழிவின் முகம் பேரழகுடன் ,குறுஞ்சிரிப்புடன் அமைந்திருந்தது .இன்றைய துரியனின் முகம் . பேரழிவு கொண்டு வரப்போகும் ஒருவனின் முகம் .

எலிபெண்டா குகை  மும்முக மகாதேவர் சிற்பத்தை காணாமல் ஒரு வாசகன் வெண்முரசு வாசிப்பில் முழுமையை அடைய முடியாது என ஐயமின்றி சொல்வேன் . 

கடலூர் சீனு