Wednesday, January 10, 2018

தோழனுமாக ஒருவன்



அன்புள்ள ஜெ

நலம்தானே? நீண்ட இடைவேளைக்குப்பின் கடிதம். வெண்முரசு படித்துக்கொண்டிருக்கிறேன். எழுதவேண்டும் என நினைப்பேன். ஆனால் நம்மால்தான் கோர்வையாக எழுதமுடியாதே கோர்வையாக எழுதுபவர்கள்தான் இருக்கிறார்களே என்று நினைப்பு வந்ததும் தவிர்த்துவிடுவேன் ஆனால் இன்றைக்கு கிருஷ்ணன் வந்து இறங்கும்போது தேவிகையும் விஜயையும் மாடியில் நின்று பார்க்கும் இடம் வந்தபோது அதைப்பற்றி எழுதவேண்டும் எனு தோன்றியது. அதிலும் தேவிகையின் உடலில் வரும் துள்ளலை பார்க்க முடியும்போலிருந்தது. கிருஷ்ணனை பீமன் அள்ளித்தழுவிச்ச்சுழற்றும் இடமும் கண்களை நிறையச்செய்தது. தலைவனும் தோழனுமாக ஒருவன் என்பதுதான் எவ்வளவு அற்புதமான விஷ்யம் இல்லையா?


சாந்தகுமார்