அன்புள்ள ஜெ ,
பின்தொடரும் நிழலின் குரல் நாவலில் அருணாச்சலத்திற்கு அவர் குரு எழுதும் கடிதத்தில் சொல்வார் ' உன் பெண் பிள்ளை கூட நேரம் செலவளி , குழந்தையாக ( சிறுமியாக ) இருக்கும் போதுதான் எடுத்து கொஞ்ச முடியும் , வளர்ந்து விட்டால்
பின் முடியாது ' என்பது போல . திருதிராஷ்டிரர் துச்சளையை கைகளால் வருடி அறிந்தபோது , அனைத்தபோது அதிர்ந்தேன் , காமமெல்லாம் முற்றழிந்த ஒருவரால்தான் தன் வளர்ந்த மகளை குழந்தையாக எடுத்து கொஞ்ச முடியும் ,வருட முடியும் என்று நினைத்தேன் .

கண்ணில்லாத மண்புழு என்பது மிக பொருந்தி வந்தது , அவர் எப்படியாவது முட்டிமோதி யார் காலிலாவது விழுந்து ,தன் மகன் மூலம் தன்னை நீட்டிக்க விரும்புகிறார் . பிறந்த குழந்தையின் குணம் இது , வாய்க்கு அகப்பட்டதையெல்லாம் உண்ண முனையும் ஆற்றல் , இறப்பிற்கு எதிராகதான் அந்த ஆற்றல் மனிதனுள் திரும்ப வருகிறது என நினைக்கிறேன் .
ராதாகிருஷ்ணன்