ஜெ சார்
இப்படியெல்லாம் வாசிக்கலாமா என்று எனக்கு உண்மையில் தெரியவில்லை. ஆனால் இப்படித்தோன்றியது.
காரணம் எனக்கு நெருக்கமான இரண்டுபேருக்கு இந்தப்பிரச்சினை உள்ளது. விஜயையின் பிரச்சினை
ஹைப்பர் டிப்ரஷன். தூக்கமில்லை. ஆனால் விழிப்புமில்லை. அப்படியே கைகாலெல்லாம் அசைக்கமுடியாமல்
அப்படியே கிடந்துகொண்டிருப்பது. அதிலும் விஜயை மஞ்சத்தில் கண்மூடி கைகால்கள் முற்றிலும் தளர்ந்து வாழைத்தண்டுகள் என எடைகொண்டு இறகுச் சேக்கை மேல் படிந்திருக்க புதைந்தவள்போல கிடந்தாள் என்ற வரி மிகச்சரியாக அந்த நிலையைக் காட்டுகிறது. அதனால்தான்
அவள் சகதேவனைப் புண்படுத்துகிறாள். ஹைப்பர் டிப்ரஷன் உள்ளவர்கள் அப்படி ஓவராக உணர்ச்சிவசப்படுவார்கள்.
நடுவயதானபெண்களிடையே இது கொஞ்சம் அதிகம். அவர்களுக்கு வாழ்க்கையிலே ஒரு பெரிய வெறுமை
இருக்கிறதென நினைக்கிறேன். ஆனால் அதேசமயம் சகதேவன் சொல்வதுபோல இரட்டைநிலையால் வரும்
மன அழுத்தமும் காரணமாக இருக்கலாம். ஹைப்பர் டிப்ரஷன் ஒருகட்டத்த்ல் பைபோலார் சிண்ட்ரோம்
ஆக மாறிவிடுகிறது என்கிறார்கள். நான் விஜயையின் நடத்தையை மட்டும் வாசித்தேன். ஆரம்பம்
முதலே அவள் இரண்டாகப்பிளந்துதான் இருக்கிறாள். அபயை அவளுடைய ஆல்டர் ஈகோதான். அந்த நிலையே
அவளை இந்த டிப்ரஷன் நோக்கிச் செலுத்துகிறது.
ராகவேந்திரன்