Sunday, January 28, 2018

பலி



அன்புள்ள ஜெ,


சித்தம் அப்படியே தடைபட்டு  நின்று நிகழ்வுகளை மட்டும் வெறித்து  பார்க்கும் மனநிலையில்  வாசித்தேன் :)


விவரிப்புகள் அசரடித்தது , ஊர்வரின்  சுண்டுவிரலில் இருந்த நீலமணியாழி முதல் எரியும்  விறகு  கட்டையை  பயந்து அதையே அணைக்கும்  கருங்குரங்கு  வரை .
உங்களுக்கு தெரிந்த தகவல்களுக்கு  எல்லையே  இல்லை போல :)  பாம்பை எடுத்து போடும் காட்சி ,   வாலை தட்டி தலையை  தூக்க வைப்பதன் வழியாக கழுத்தை பிடித்து தூக்குவது என

அது போல துல்லியமும் , எருமைகள்  ,கழுதைகள்  வெட்ட படுவதும்  , பன்றி கிழிக்க  ( அறுக்க )  படுவது.மந்திர  ஒலிகளுக்கேற்ப  தழல் நடனமாடுகிறது  , கூட காடும்  சேர்ந்து ஆடுகிறது  எனும் இடம் மனதை நடுங்க  வைக்கிறது .
துரியோதனன் சீர்நடையில்  நடந்தது அவனின் தெளிவான மன நிலையை சொல்லியது .

மரப்பட்டை  முதலையை  தோல்  போல எனும் உவமையை  மிக ரசித்தேன் .
இன்றய அத்தியாயத்தை  பற்றி இன்னொரு கடிதமும் கொஞ்சம் நேரம்கழித்து அனுப்புவேன்  :)

ராதாகிருஷ்ணன்