ஜெ
இந்த அத்தியாயத்தில் தாரையை பரல்மீனாக வர்ணித்திருப்பது அபாரமான ஒரு உவமை. நான்
டிப்ளமோ ஃபிஷரீஸ் படித்தவன். இந்தச்சிறிய மீன்களைப்பார்க்கும்போதெல்லாம் அவற்றின் துணிச்சல்
ஆச்சரியம் தரும். ஏனென்றால் அவற்றுக்கு பார்வைத்தூரம் கம்மி. பெரிய மீன்களைப்பார்க்க
முடியாது. எதிரியையே அறியாது. கூட்டமாகத்தான் தப்பமுடியுமே ஒழிய தனியாகத் தப்பமுடியாது.
நம்பர் பெரிதாகையால்தான் சர்வைவல். ஆச்சரியமான விஷயம் இது. ஒரு சின்ன வெள்ளித்திப்பி
மாதிரி இருக்கும். தாரைக்குச் சரியான உவமை
ஸ்டீபன் ராஜ்