Monday, January 29, 2018

அருவருப்பும் பீதியும்


அன்புள்ள ஜெ

துரியோதனன் தன்னை அர்ப்பணிக்கும் காட்சியின் வரிவரியாகச் செல்லும் நுட்பங்களை கண்டு அருவருப்பும் பீதியும் அடைந்தாலும் வாசித்து முடிக்காமலும் இருக்கமுடியவில்லை. சொல்லப்போனால் மீண்டும் ஒருமுறை வாசித்தேன். எத்தனைமுறை வாசித்தாலும் ஏதோ ஒன்று இருக்கிறது. முதலில் உறவைத்துறக்கிறான். அதற்கு குல இலச்சினை. அதன்பின் உடல். உடலில் அத்தனை விலங்குகள் இருக்கின்றன. நாகங்கள் காகங்கள் குரங்குகள் அட்டைகள் எல்லாமே உள்ளன. அதன்பிறகு ஆன்மா. ஆன்மாவில் எருமையும் கழுதையும் பன்றியும். பன்றிக்கழுத்தை வெட்டமுடியாதென்பதைக்கூட நாவலில் இருந்து தெரிந்துகொண்டேன். அந்தபலி ஒரு கருக்குழி. அதிலிருந்து அவர் மேலெழுந்து வருகிறது குழந்தை பிறப்பதுபோல


சுந்தரராஜன்