துச்சளைக்கு வயதாகி விட்டது, ஆள் பருத்து விட்டாள். ஆனால் உள்ளே அவள் இன்னமும் கௌரவராகவேதான் இருக்கிறாள். அதனால்தான் திருதா அவளைத் தழுவிக் கொண்டு விரல்களால் அறிகிறார். ஒருவரின் பகுதியாக நாம் உணர்கையிலேயே தழுவிக் கொள்ள முடியும், அந்த பகுதி வளர்ந்தோ, பிரிந்தோ விட்டால் உடலால் தழுவிக் கொள்ள முடியாது, பெற்றவர்களிடம் கூட. கௌரவர்கள் எவரையும் அவர் தழுவியாதாக் காணவேயில்லை நெடுனாட்களாக. தழுவல்தான் அவருடைய மொழி, அவர் நெடுனாட்களாக யாரோடும் உரையாடாமலிருக்கிறார். வேழத்தின் தனிமை.
ஏ.வி.மணிகண்டன்