Monday, January 29, 2018

செதுக்க படாத மலை



அன்புள்ள ஜெ , 

செதுக்க படாத மலைகற்களால் உருவாக்க பட்ட ஆலயம் என்பது அந்த ஆலயத்தின் பழமையை சொல்லியது , கூடவே அதர்வ வேதமும் அப்படியானது என நினைத்தேன் .நேரெதிர் சிற்றாடிகளும் யோசிக்க சுவாரஸ்யமாக இருந்தது , இரண்டும் ஒன்றையொன்று பிரதிபலிப்பவை என நினைத்தேன் .

இன்னும் எல்லாவற்றையும் இப்படிச்  சொல்ல தோன்றுகிறது , ஆனால் இதெல்லாம் மீறி இதில் ஈர்ப்பது மனம் திரும்பும் திசைகளை நீங்கள் அனாசயமாக நீங்கள் காட்டுவதுதான் , அந்த தருணம் முடிந்ததும் துச்சாதனனை நேசமுடன் இருளில் வருவாரா என பார்த்த துச்சளையின் மனம் என.

இன்னொன்று துச்சளை மருத மரத்தடியில் நின்றது , அந்த மருதமரம் ஏதோ குறிப்புணர்த்துகிறது என நினைத்தேன் , அவளை ஒரு நல்லதெய்வம் குடையாக காத்தது என , ஏனெனில் திரும்ப அவள் பாம்புகளுக்கு பயந்து மருதமரம் கீழ்தான் வந்து நிற்கிறாள் , அதனால்தான் அவ்வாறு எண்ணினேன் :)

ராதாகிருஷ்ணன்