Thursday, January 18, 2018

குந்தியின் மனநிலை



அன்புள்ள ஜெ ,


குந்தி பீமனிடம்  'தான் ஏன் தன் மகனை பாரத சக்ரவர்த்தியாக்க  முயல்கிறேன் ' என்பதற்காக காரணத்தை கூறிய  இடம் வெண்முரசின் மிக சிறந்த இடங்களில் ஒன்று .


அந்த காட்சிக்கு  பிறகு குந்தி பற்றியும் பாண்டு  பற்றியும்  நான் எண்ணியிருந்தவைகள்  மாறியிருந்தன  , பாண்டுவில் இப்படியான தன் உடல் சார்ந்த தாழ்வுணர்வு இருப்பதை நான் கவனிக்கவே  இல்லை , குந்தி அதை உணர்ந்து அவன் குறைகளை மகன்கள்  மூலம் தாண்ட நினைப்பது  என நினைப்பவள்  என்பதே அவள் சொல்லிய பிறகுதான் என்னால் உணர முடிந்தது , இதன் முன் வேறு மாதிரி எண்ணியிருந்தேன்  .


இது உண்மையில் அன்னையின் மனநிலை , தன் அழகற்ற  மகனையும்  பேரழகனாக  எண்ணுவதை  போன்றது , குந்தியில் கொஞ்சம் காளியின் அம்சமும்  இருக்கின்றது :) ,அதனால்தான் அந்த எண்ணத்தை உண்மையாக்க முயல்கிறாள்  தன் பிள்ளைகளின்  மூலம் , இது உண்மையில் சுவாரஸ்யமாக  இருக்கிறது , குந்தியின் இந்த  எண்ணத்தை உணர்ந்து அவளுக்கு  உதவ தேவர்கள்   பிள்ளைகளை  கொடுத்து சென்றார்கள் போல , அல்லது அந்த எண்ணத்திற்காக  தேவர்களுகளுடன்  இணைத்து மைந்தர்களை இவள் பெற்றெடுத்தாள்  போல என எண்ணி கொண்டேன்


ராதா கிருஷ்ணன்